மஞ்சள் காமாலை பாதிப்பு காரணமாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். Karunanidi Health Condition Tamil News
கடந்த 27 ம் தேதி கருணாநிதி ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கருணாநிதி நலம் குறித்து விசாரித்து வந்தனர்.
இன்று ( 6ம் தேதி) காலை முதல் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முதன்முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் துணைவி ராஜாத்தி ஆகியோர் வந்துள்ளனர். மருத்துவமனையில் தொடர்ந்து, 10 வது நாளாக கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.