திமுக தலைவர் கருணாநிதி தற்போது நலமாக இருக்கிறார் என்று அவரது மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார். Karunanidhi currently goodhealth says Kanimozhi tamilnews
தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 18-ம் தேதி முதல் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உடல்நலம் குறித்த செய்திகள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டிரயாக்ஸ்டமி செயற்கை சுவாசக் குழாய் புதிதாக பொருத்தப்பட்டதால் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததாக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை நலமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, “கருணாநிதிக்கு வெள்ளிக்கிழமை திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. தற்போது கருணாநிதி நலமாக இருக்கிறார். அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். Karunanidhi currently goodhealth says Kanimozhi tamilnews
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்