(Karthi New Movie Title Dev)
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ”கடைக்குட்டி சிங்கம்” படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.
”கடைக்குட்டி சிங்கம்” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்தப் படம் ஜூலையில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார்த்தி அடுத்ததாக அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் ஒரு கிரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல்பிரீத்தி சிங் நடிக்கிறார்.
இருவரும் ஏற்கனவே “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் இணைந்து நடித்தனர். அவர்களின் கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்பட்டது.
இப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்நிலையில் கார்த்தி, ரஜத் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு, “தேவ்” என்னும் பெயரை சூட்டலாம் என்று ஆலோசனை நடக்கிறது.
கார்த்தியின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
”தேவ்” சூர்யா மகனின் பெயர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
<MOST RELATED CINEMA NEWS>>
* இணையத்தில் வைரலாகும் “காலா” பட டிரைலர்..!
* ஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..!
* ஜெமினி கணேசன் ஆவணப்படம் : சாவித்திரிக்கு எதிரான காட்சிகளா..!
* தோனி நாட்டின் பிரதமராக மாறினால்..? : விக்னேன் சிவனின் பரபரப்பு டுவீட்..!
* சத்தமில்லாமல் ஒரு சாதனையை செய்து முடித்த அஜித்..!
* ஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..!
* கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடும் வயதான நடிகை..!
* மெர்சலுக்கு கிடைத்த பெருமை தற்போது காலா படத்துக்கும்..!
* எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை : அனுஷ்கா பகீர் பேட்டி..!
Tags :-Karthi New Movie Title Dev
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-