Kalkhi incarnate need come work said Indian state government official
நான் கல்கி அவதாரம் என்றும் அதனால் வேலைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இந்திய குஜராத் மாநில அரச அதிகாரி கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திரா பெபர். அரசு அதிகாரியான இவர், கடந்த சில மாதங்களாக அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால், அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்கு பெபர் அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம் நான்தான்.வீட்டில் இருந்து தவம் செய்து வருகிறேன்.
என் தவத்தின் பயனாக சில ஆண்டுகளாக நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டில் அலுவலகத்தில் இருக்கும்போதுதான் நான் கல்கி அவதாரம் என்பதை உணர்ந்தேன். அப்போதிலிருந்து எனக்கு தெய்வ சக்திகள்கிடைத்து வந்தன. நான் கடவுள் அவதாரம் என்பதால் வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
என்னால் அலுவலகத்தில் அமர்ந்து தவம் செய்ய முடியவில்லைஎன்று கூறியுள்ளார். அரசு அதிகாரியின் இந்த விநோத நடவடிக்கை மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kalkhi incarnate need come work said Indian state government official
More Tamil News
- குட்கா போதைபொருள் முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
- வாரணாசியில் மேம்பால விபத்து – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு
- நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை 100 சதவீதம் நிரூபிப்போம் – எடியூரப்பா
- நிலக்கரி பிரச்சனை : தமிழகத்தில் மின் வெட்டு அபாயம்!
- விஜயகாந்துடன் கூட்டணி : சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்!
- சென்னையில் இடிந்து விழுந்த பால்கனி : பேத்தியை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய பாட்டி!
- எம்.எல்.ஏ’க்களை தக்க வைக்க காங் – ம.ஜ.த – தீவிரம் : நள்ளிரவில் விடுதியை காலி செய்து ஐதராபாத் பயணம்!
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
TAMIL NEWS GROUP WEBSITES :