கடந்த ஆண்டை விட எரிவாயுவின் விலை, குறிப்பிட்ட மருத்துவ ஆலோசனைகளின் (consultation) செலவு, குழந்தைகள் தடுப்பூசிகளுக்கான செலவு மற்றும் பாரிஸில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் இலவச பயணம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. June month France economy changes
ஒவ்வொரு மாதமும் பிரான்ஸில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இவை ஜூன் மாதம் நடைபெறும் மாற்றங்கள்:
* எரிவாயு விலைகள்:
ஜூன் 1 ம் தேதி எரிவாயுவின் விலை சராசரியாக 2.1% ஆல் உயர்வடைகின்றது என ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம் (CRE) கூறியுள்ளது.
* வரி:
ஒன்லைன் வருமான வரி அறவிடலுக்கான கடைசி நாள், இந்த மாத தொடக்கத்தில் வரும். காகித வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மே 17 அன்று நள்ளிரவுடன் முடிவடைந்தது நாம் அறிந்ததே. ஒன்லைனில் அவர்களது வருமானத்தை தாக்கல் செய்பவர்கள், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை பொறுத்து, மாறுபடும்.
2016 ம் ஆண்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட வருவாய் மட்டத்திற்கு மேலாக உழைப்பவர்கள் ஒன்லைன் மூலம் அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் அடுத்த ஆண்டு முதல் ஒன்லைன் மூலம் அறிவிக்கப்பட்டு, ஒன்லைன் மூலமே நீங்கள் தாக்கல் செய்யமுடியும் என்று கூறப்படுகிறது.
* மருத்துவ ஆலோசனை:
ஒரு GP அல்லது நிபுணருடனான மருத்துவ ஆலோசனைகளின் செலவு 48 € இருந்து € 50 வரை உயரும், ஒரு மனநல மருத்துவர், ஒரு நரம்பியல் மருத்துவர் அல்லது ஒரு நரம்பியல் நிபுணருக்கான செலவு 60 முதல் € 62.50 வரை உயரும்.
2018 ஜனவரி 1 க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை மூன்று முதல் 11 வரை உயர்ந்துள்ளது.
* பாரிஸில் 65 வயதை தாண்டிய 200,000 க்கும் மேற்பட்டவர்களின் இலவச பயணம்:
ஜூன் 1 முதல் 65 வயதிற்கும் மேற்பட்ட பாரிஸ் குடியுரிமை கொண்ட சிலர் இலவசமாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது அவர்களின் மாத வருமானம் 2,028 யூரோக்களுக்கு குறைவாக இருந்தால் இலவச பொது போக்குவரத்தை பயன்படுத்த முடியும்
விண்ணப்பதாரர்கள் 2,028 யூரோக்களுக்கு குறைவான மாத வருமானத்துடன் பயனடைவார்கள். சிட்டி ஹால் மதிப்பீட்டின் படி 200,000 வரையான பாரிஸியர்கள் இலவச பயணத்திற்கு தகுதியுடையவர்கள். இதற்கான செலவு நகரத்திற்கு 12 மில்லியன் யூரோ எனவும் மதிப்பிட்டு தெரிவித்துள்ளனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!