கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த எவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவும் முடியாது, அதை கோரும் உரிமையும் அவர்களுக்கு இல்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.Joint opposition party cannot require opposition leader position
கூட்டு எதிர்க்கட்சி என அடையாளப்படுத்திக்கொள்ளும் குழு எதிர்க்கட்சி பதவியை கோரி வரும் நிலையில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் தெரிவித்ததாவது,
தினேஸ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இயங்கும் ஒரு குழுவினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையில் போட்டியிட்டு தெரிவானவர்களே.
அவர்கள் தற்போது முன்னாள் ஜனாதிபதிக்கு தரகர்களாக செயற்படுகின்றார்கள். இருப்பினும் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பானவர்களே.
அக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே ஆட்சியை முன்னெடுத்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறவும் முடியாது, அதை கோரும் உரிமையும் அவர்களுக்கு இல்லை என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com