வாள்வெட்டு குழு பயன்படுத்திய உந்­து­ரு­ளி­யின் உரிமையாளர் கைது!

0
490
Jaffna Sword Violence Team Used Motor Bike Owner Arrested

யாழ்ப்பாணம் கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள வீடு மற்­றும் வண்­ணார்­பண்ணை கிராம அலு­வ­லர் பணி­மனை என்­ப­ன­வற்­றின் மீது நேற்று முன்­தி­னம் பகல் வாள்­க­ளு­டன் வந்­த­வர்­க­ளால் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

தாக்­கு­த­லா­ளி­கள் இலக்­கத் தக­டு­கள் மறைக்­கப்­பட்ட உந்­து­ரு­ளி­யி­லேயே வந்­தி­ருந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வங்­க­ளின் பின்­னர் கொக்­கு­வில் பகு­தி­யி­லி­ருந்து இலக்­கத் தக­டு­கள் மறைக்­கப்­பட்ட உந்­து­ருளி ஒன்று பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டது.

உந்­து­ரு­ளி­யின் இலக்­கத் தகட்டு இலக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் பொலி­ஸார் விசா­ரணை முன்­னெ­டுத்­த­னர்.

உந்­து­ருளி வவு­னி­யா­வில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது என தெரியவந்துள்ளது.

இலக்­கத் தக­டு­கள் துணி­யால் மூடிக்­கட்டி மறைக்­கப்­பட்ட நிலை­யில் கொக்­கு­வி­லில் நேற்­று­முன்­தி­னம் மீட்­கப்­பட்­ட உந்­து­ரு­ளி­யின் உரி­மை­யா­ளர் கோப்­பா­யில் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites