யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வண்ணார் பண்ணை ஜே 100 கிராம அலுவலர் அலுவலகத்துக்குள் நேற்றையதினம் நுழைந்த வாள்வெட்டுக்குழுவினர் வாள் முனையில் கிராம அலுவலரை அச்சுறுத்தியதுடன், அலுவலகத்தில் இருந்த மடிக்கணினி மற்றும் உபகரணங்களை உடைத்து கிராம அலுவலரின் கைப்பேசியையும் பறித்து உடைத்துள்ளனர். Jaffna Nallur Divisional Grama Officers Strike Tamil News
அத்துடன் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி ஆகியவற்றையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக் குழுவின் இந்த அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கிராம சேவை அலுவலர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கிராம அலுவலர் அலுவலகத்தை தாக்கியதுடன் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதை கண்டித்தும், மற்றும் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரியும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமது அலுவலகங்களுக்குச் செல்லாது இன்று பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகத்தில் இருந்தே கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கிராம சேவை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- மத்தல விமான நிலையத்தினால் மாதாந்தம் 2500 இலட்சம் ரூபா செலவு
- வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத பேராசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு