பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சீக்கியர் ரக்பிர் சிங் சங்கோரா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். தற்போது பிரிட்டனின் டெர்பி நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் மத குருவாகவும், பண்ணை தொழிலும் செய்து வருகிறார். Indian farmer achieved Britain world’s longest growing cucumber
மிகச்சாதாரணமான இவர் தற்போது உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார். 51 இன்ச் நீளம் வளர்ந்துள்ள இந்த வெள்ளரிக்காய் இதற்கு முன்னதாக உலக சாதனையாக கருதப்பட்ட 42 இஞ்ச் நீளத்தை முறியடித்துள்ளது.
இதுகுறித்து ரக்பிர் சிங் கூறுகையில், இந்த வெள்ளரிக்காய் வளர தினமும் கடவுளை வேண்டி வந்ததாகவும், வளரும் பருவத்தில் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து பார்த்து பார்த்து வளர்த்ததாகவும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 39 இஞ்ச் நீளமுள்ள வெள்ளரிக்காயை தாம் வளர்த்ததாகவும், அதில் திருப்தி அடையாததால் தொடர்ந்து முயற்சித்து தற்போது சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெள்ளரிக்காய் இன்னும் தனது நீளத்திலும் அகலத்திலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது இதில் ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது.
tags :- Indian farmer achieved Britain world’s longest growing cucumber
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- இங்கிலாந்து வங்கியின் வட்டி வீதம் அதிகரிப்பு
- செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்த முதல் பிரிட்டன் வீராங்கனை
- இரட்டைக் கருப்பையில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
- இங்கிலாந்திற்கு மீண்டும் வெப்பநிலை!
- பிரெக்சிற் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!
- பிரித்தானியா கடலில் மூழ்கிய 6 வயது சிறுமி உயிரிழப்பு!