இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக உறுப்பினர் பூனம் மகாஜன் உரையாற்றியவேளை, “இலங்கையின் மத்தல விமான நிலையத்தை வாங்குவதற்கு திட்டமுள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். India Government No Idea Buy Mattala Airport
இதற்கு, சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா பதிலளிக்கும் போது, “இல்லை, தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்தார்.
மத்தல விமான நிலையத்தில் இந்திய விமான நிலையங்கள் அதிகார சபை, விமானிகள் பறப்பு பாடசாலை, பழுதுபார்க்கும், புதுப்பிக்கும், அலகு ஒன்றை நிறுவப் போகிறதா என்று பாஜக உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்கு, இணை அமைச்சர் சின்ஹா எதிர்மறையான இந்தப் பதிலை அளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 19ஆம் நாள், சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, மத்தல விமான நிலையத்தை இயக்குவதற்கான வணிகத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தியத் தரப்பில் அதற்கு மாறான பதில் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்