ஆப்கானிஸ்தானுக்கு சவால்!!! : இமாலய ஓட்ட எண்ணிக்கையை குவித்தது இந்தியா

0
576
India first innings vs Afghanistan 2018 news Tamil

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அபார சதத்தின் உதவியுடன் இந்திய அணி 474 ஓட்டங்களை குவித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு மிகச் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

வேகமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த சிக்கர் தவான் முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் சதம் விளாசியதுடன், 96 பந்துகளுக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து தனது ஸ்டைலில் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவருடன் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிய கே.எல்.ராஹுல் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து வந்த புஜாரா 35 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இன்றைய தினம் ஹர்த்திக் பாண்டியா அரைச்சதத்தை கடந்து 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவர்களை தொடர்ந்து அஸ்வின் 18 ஓட்டங்களையும், ஜடேஜா 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த நிலையில், இறுதி விக்கட்டுக்காக இணைந்த உமேஷ் யாதவ், இசான் சர்மா ஜோடி 34 ஓட்டங்களை பகிர்ந்தது.

உமேஷ் யாதவ் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், இசான் சர்மா 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிக்க, இந்திய அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களை குவித்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட ரஷீட் கான் 154 ஓட்டங்களை வழங்கி 2 விக்கட்டுகளை மாத்திரம் வீழ்த்த, முஜிப் உர் ரஹ்மான் 75 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை வீழ்த்த, வேகப்பந்து வீச்சாளர்களான அஹமட்ஷாய் 3 விக்கட்டுகளையும், மித வேகப்பந்து வீச்சாளர் வஃபடர் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

<<Tamil News Group websites>>

India first innings vs Afghanistan 2018 news Tamil, India first innings vs Afghanistan 2018 news Tamil