இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டுவிட்டரில் ஏ.என்.ஐ.டிஜிட்டல் என்ற ஊடகம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதில் வெளியிட்டுள்ளமை தற்போது வைரலாக பரவி வருகின்றது.
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர், தமிழில் டுவிட்டர் பதிவுகளை மேற்கொண்டு, அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்நிலையில் தொடர் முடிந்த பிறகும் டுவிட்டரில் அதிகமாக ஈடுபாடு காட்டிவந்த ஹர்பஜன், அரசியல் பதிவொன்றுக்கு பதிலளித்துள்ளார்.
குறித்த ஊடகத்தின் டுவிட்டர் பதிவில், “இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் – பேஸ்வரில் உள்ள சீக்கிய மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு குடிப்பெயருகின்றனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பதிவின் கீழ், தனது கருத்தை பகிர்ந்திருந்த ஹர்பஜன், “இதுபோன்ற செய்திகளை கேள்விப்படும் போது, இவ்வாறான செயல்கள் இன்னும் நடக்கின்றது… என்பதுடன் அதிகமான கவலையை ஏற்படுத்துகின்றது” என பதிவிட்டிருந்தார்.
பின்னர் ஹர்பஜனின் பதிவுக்கு கீழ் இந்தியாவைச் சேர்ந்த மெராஜ் அஹமட் என்பவர், “சிறுபான்மையினர் இன்னும் இந்தியாவில் கொல்லப்படுகின்றனர். இதுதொடர்பிலும் நீங்கள் கேள்வி எழுப்பவேண்டும்” என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த நபரின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஹர்பஜன், நான் பொதுவான மனிதநேயத்தை பற்றிதான் பேசுகின்றேன்” என பதிலளித்துள்ளார்.
தற்போது இந்த டுவிட்டர் பதிவுகள் வைரலாக பரவிவருகின்றது.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
harbhajan singh viral Tweet news Tamil, harbhajan singh viral Tweet news Tamil