வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – அபர்ணதி நடித்து வரும் புதிய படத்திற்கு ”ஜெயில்” என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.Gv prakash Aparnathi movie title firstlook poster release
இந்நிலையில், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ”ஜெயில்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சியான ”எங்க வீட்டு மாப்பிள்ளை” யில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி நடிக்கிறார்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ”பள்ளிப்பருவத்திலே” படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ”பசங்க” பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இப் படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.
”அங்காடித்தெரு”, ”வெயில்”, ”அரவான்”, ”காவியத்தலைவன்” படங்களை இயக்கிய வசந்த பாலன் இப்படத்தை இயக்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Photo Credit : Google Image
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* கஜினிகாந்த் : திரை விமர்சனம்..!
* லெஸ்பியன் படத்தில் முத்தத்தை அள்ளித் தெறிக்கவிட்ட பிக் பாஸ் ஐஸ்வர்யா : அதிர்ச்சிக் காணொளி..!
* பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!
* ஜிமிக்கி கம்மல் ஷெரில் நடனத்தை காப்பியடித்த ஜோதிகா..!
* நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!
* நீருக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை நீச்சலில் காட்டிய இலியானா..!
* சிம்பு – ஓவியா இணையும் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு..!