Gurgaon court ruled person stole phone sentenced 5 years jail fined
தொலைபேசியை திருடிய நபர் ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், 25 ஆயிரம் இந்திய ரூபா அபராதம் விதித்து இந்திய அரியானா மாநிலம் குர்கான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து அரச சட்டத்தரணி அனுராக் ஹோடா கூறியதாவது:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 அன்று தொலைபேசி திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சோஹ்னாவைச் சேர்ந்த நந்த் கிஷோர் மற்றும் இவரது சிறுவர் சீர்திருத்தப் பள்ளி நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கிஷோர் சிறைக்கும் அவரது நண்பர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணையில் கிஷோர் குற்றம் செய்து நிரூபணமானது. இந்நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இது தவிர அவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே. சோந்தி நேற்று வழங்கினார.
இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் தொலைபேசி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் திருட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருந்தன.
தொலைபேசி திருட்டில் ஐ.எம்.இ.ஐ எண்ணை அழிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்திருந்தது.
அவ்வகையில் கிஷோர் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தன்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Gurgaon court ruled person stole phone sentenced 5 years jail fined
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :