பிரான்ஸில் மழை தொடர்வதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு பலரும் இவ் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். French 82 year old woman dies floods
Nouvelle-Aquitaine பகுதியில் ஏற்பட வெள்ளப்பெருக்கினால் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை உள்ளூர் தீயணைப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது, ஏற்கனவே பிரான்ஸ் முழுவதும் மோசமான வானிலை எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தது.
ஒரு 82 வயதான பெண்ணின் உடல் இன்று அதிகாலை 1 மணிக்கு Casseneuil இலுள்ள, Lede ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் ஆற்றில் விழுந்து மூழ்கிப்போனதாக அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவே இந்த வாரம் வெள்ளத்தினால் ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பாகும். புயல் மற்றும் கடுமையான மழை காரணமாக நாடு பூராகவும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்கனவே 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நபர் வந்த கார் Eure பகுதியிலுள்ள சாலையில் விபத்துக்குள்ளாகி அவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.
**Most Related Tamil News**
- மதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ்!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!