நாமலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 11 வரை ஒத்தி வைப்பு

0
435
we cant say place but picketing confirm namal rajapaksha

(fraudulent case filed six persons including Namal Rajapaksa)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலங்களில் இரண்டு பதிவுகள் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் பிரதான சாட்சியாளரான ரொஹான் அபய ஈரியகொல்ல நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையின் போது, முன்னதாக இரகசியப் பொலிஸாருக்கு வழங்கிய 05 வாக்கு மூலங்களில் இரண்டு பதிவுகள் பொய்யானது என்று சாட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வழக்கின் பிரதிவாதியால் 36 மில்லியன் ரூபாவுக்கான காசோலை தனக்கு வழங்கப்பட்டதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ள சாட்சியாளர், நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போதே 30 மில்லியன் ரூபாவுக்கான காசோலையே வழங்கப்பட்டதாக சாட்சியமளித்துள்ளார்.

இவை ஒன்றுக்கொன்று முரணானதா, இல்லையா என்ற நாமல் ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணியின் விசாரணைக்கு பதிலளிக்கும் போதே சாட்சியாளர் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

(fraudulent case filed six persons including Namal Rajapaksa)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites