செந்தனியில் இரு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளார். France poisoning infants kindergarten
இந்த கொடூர சம்பவம் Neuilly-sur-Marne பகுதியில் இடம்பெற்றுள்ளது. Ville-Evrard பகுதியில் உள்ள மழலையர் பாடசாலை ஒன்றில் வேலை செய்யும் குறித்த 51 வயதுடைய பெண், anxiolytics மருந்தை உணவில் கலந்துள்ளார்.
கடந்த ஜூன் 5 ஆம் திகதி 16 மாத குழந்தை ஒன்றுக்கும், அதன் பின்னர் இரு வாரங்கள் கழித்து 9 மாத குழந்தை ஒன்றுக்கும் இந்த மருந்தை ஊட்டியுள்ளார். குறித்த இரு குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதனால், கடந்த வெள்ளிக்கிழமை இச்செயலுக்கு காரணமாக இருந்த குறித்த பெண் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொபினி காவல்துறையினர் மருத்துவர்களின் உதவியோடு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
tags :- France poisoning infants kindergarten
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- திருட வந்த வீட்டில் செய்த காரியத்தால் மாட்டி கொண்ட திருடர்கள்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.