வேலையில்லா திண்டாட்டம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் காணப்படும் முக்கியமான பிரச்சினை. ஒருபுறம், புதிய நிறுவனங்களும், மறுபுறம் புதிய கல்லூரிகளும் தோற்றுவிக்கப்படுகின்றன. France knows team names
படித்து முடித்து வெளியே வருபவர்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகள் இரண்டுக்குமான இடைவெளி அதிகரித்தவண்ணம் உள்ளது. காலியாக உள்ள பணியிடம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் நிலையுள்ளது. அதுவும், அரசபணி என்றால் கேட்கவே வேண்டாம், ஒரு பணியிடத்துக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில், கொச்சியிலுள்ள விளம்பர நிறுவனமொன்று வேலை தேடுபவர்களிடையே வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆய்ருஸ் டேட்டா எனும் மார்க்கெட்டிங் நிறுவனம் கொச்சியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உங்களுக்கு வேலை வேண்டுமானால், அதற்கு ஒரே நிபந்தனை, பிரான்ஸ் கால்பந்து அணியின் அனைத்து வீரர்களின் பெயர்களும் உங்களுக்கு தெரிந்தால்போதும்.
இதுதொடர்பாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கென்னி ஜேக்கப் கூறியதாவது:- இந்தப் பணிக்கு தேர்வாகும் நபர் விளையாட்டு தொடர்பாக எந்த அளவுக்கு விஷயம் தெரிந்தவர் என்பதை மட்டுமே நாங்கள் பார்ப்போம், வேறு எந்த தகுதிகளும் முக்கியமில்லை.
இங்கிலாந்தை சேர்ந்த ’டேட்டாபோவா’ என்னும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஸ்பான்சர் நிறுவனத்துக்கு நாங்கள் செய்து கொடுக்கவுள்ள project இல் இந்த புதிய நபர் ஈடுபடுத்தப்படுவார். தற்காலத்தில், பட்டப்படிப்பு சான்றிதழுக்கெல்லாம் மதிப்பு குறைவுதான். அதைவிட பல விஷயங்கள் தேவைப்படுகின்றன என்றார் கென்னி ஜேக்கப்.
கேரளாவில் பொதுவாக கால்பந்து ரசிகர்கள் அதிகம். அப்படியென்றால், இந்த வேலைக்கும் பலத்த போட்டி நிச்சயம் இருக்கும்.
tags :- France knows team names
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.