மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் நீடிப்பு: கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0
292

கடவுளின் பிள்ளை என தன்னை தானே பிரகடனப்படுத்திக் கொண்டு போதனைகளில் ஈடுபட்டு வந்த அவலோகிதேஸ்வர போதிசத்வா எனப்படும் மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவலோகிதேஸ்வர போதிசத்வா நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்ப்படுத்தினர். இதன்போதே அவரது விளக்கமறியலை ஜனவரி 24ஆம் திகதி வரை நீடிக்கும் உத்தரவை கோட்டை நீதவான் பிறப்பித்தார்.

பௌத்த மதத்தை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாககவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டே அவலோகிதேஸ்வர போதிசத்வா கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS: