Ex-MLAs Hostel Opening chief minister
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் எம்.எல்,ஏக்களுக்கான புதிய விடுதிக்கு 2012-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது,
அதைத் தொடர்ந்து, 33 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் 68 அறைகளுடன் 10 மாடிகள் கொண்ட இந்த புதிய விடுதி தற்போது கட்டி முடிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் சபாநாயகர் தனபால் விடுதியை திறந்து வைத்தார்.
இந்த விடுதியில், தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு 60 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாதமொன்றுக்கு 5 நாட்கள் வரை அவர்கள் இந்த விடுதி அறையில் தங்கிக்கொள்ளலாம். வெளிமாநில சட்டசபை குழுக்களைச் சேர்ந்தவர்கள், இங்கு வரும்போது மீதமுள்ள 8 அறைகளில் தங்கிக்கொள்ளலாம்.
இங்கு தங்க நாளொன்றுக்கு 300 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுதி அறையை ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். விடுதியில் தங்கியுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சிக்குப் பின் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விசாரணையம் ஆணையத்தின் முடிவுக்குப் பின் பார்க்கலாம் எனக் கூறினார். மேலும், நாளை தூத்துக்குடி சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
More Tamil News
- காவல்நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!
- டெல்லியை வாட்டி வதைக்கும் கோடை வெயில்!
- பாம்பன் சாலை பாலத்தில் வெடிகுண்டு – மர்ம அழைப்பு!
- கடன் பெற்றவரின் மனைவியை தாக்கிய கொடூரம்!
- தோல் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரி!