சூரிச்சில் ஒரு சிறு உணவகத்தை நடத்தும் David Lewis இற்கு சிவப்பு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. காரணம் உருகிய சுவிஸ் சீஸ் குறிப்பாக எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்பதே. சீஸ் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாததற்காக எல்லாமா குடியுரிமை மறுக்கப்படும்?Zurich man ex banker denied Swiss citizenship
லூயிஸ் சன்டேஜெஸ் ப்லிக் பத்திரிகையுடனான ஒரு நேர்காணலில் சுவிஸ் குடியுரிமை செயல்முறை மூலம் தனது ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார். தாய்மொழியான ஆங்கிலம் தவிர, 43 வயதான David Lewis இற்கு ஜெர்மன் மற்றும் பிரஞ்சு சரளமாக பேச தெரியும். அவர் மேல் எந்தவொரு குற்றவியல் பதிவும் இல்லை. பிறந்த சில நாட்களிலேயே சுவிஸ் இற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். பல ஆண்டுகளாக சுவிஸில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவர் சமீபத்தில் ஜூரிச் நகரில் ஒரு சிறிய உணவகத்தை திறந்தார்.
இவை எல்லாவற்றையும் மீறி லூயிஸின் குடியுரிமை உள்ளூர் நகராட்சியினால் நிராகரிக்கப்பட்டது. சுவிட்ஸர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பிராந்தியத்தில் இருந்து raclette சீஸ் வருகிறது என அறிந்த லூயிஸிற்கு, குறிப்பாக அது எந்த இடத்திலிருந்து வருகிறது என்பது தெரியாததினால், அவரது குடியுரிமைக்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
சுவிஸ் குடியுரிமைக்கான எழுத்துப் பரீட்சையிலும் தான் சித்தியடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முறைசாரா உரையாடலை அவர் மிகவாய் கண்டித்தார்.
Zurich man ex banker denied Swiss citizenship, Zurich man ex banker denied Swiss, Zurich man ex banker denied, denied Swiss citizenship, Swiss citizenship, Tamil Swiss news, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com