(drone dumped information received air force buried house Muniyanthiraja)
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியான முனியாண்டிராஜா ரஞ்சன் (தீபன்) என்பவரின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக விமானப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு தோண்டப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று (23) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த இடத்தில் அகழ்வை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதனைத் தொடர்ந்து அங்கு சோதனை நடத்தப்பட்டது.
தர்மபுரம் 7 ஆம் தொகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற விமானப் படையினரும் விசேட அதிரடிப் படையினரும் தர்மபுரம் பொலிசார், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சுமார் ஆறு அடி ஆழத்தில் பொலித்தீன் கொண்டு சுற்றப்பட்டு பெட்டி ஒன்றினுள் வைத்து புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி மற்றும் 5 கைத்துப்பாக்கி தோட்டாக்கள் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.
இவை பாவிக்கக் கூடிய நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
குறித்த தீபன் என்கின்ற முனியாண்டிராஜா ரஞ்சன் முன்னர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையில் உயர் தரப்புக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றத்தின் பின்னர் பாரிய அளவில் பேசப்பட்ட கோபி அப்பனின் பிரச்சினையில் தொடர்புடையவர் என சந்தேகத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்ய முற்ப்பட்ட பொழுது நாட்டை விட்டு தப்பிச் சென்று புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று மீட்க்கப்பட்டது போன்ற வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி கோபி அப்பனின் பிரச்சினைகள் இடம்பெற்ற பொழுது இரண்டு நாட்டின் பாதுகாப்பு தரப்பினரால் மீட்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(drone dumped information received air force buried house Muniyanthiraja)
More Tamil News
- மண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்
- யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி
- மஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- 11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்
- கள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்