(Drink 2 liters water everyday)
நாட்டில் நிலவும் உயர் வெப்ப காலநிலை காரணமாக வயது வந்தவர்கள் தினமும் இரண்டு லீற்றர் நீர் அருந்துவது உகந்தது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நீர் அதிகளவில் அருந்துவது முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், நீர் அருந்தும் போது எலுமிச்சம் பழம் அல்லது வெள்ளரிக்காய் ஆகியவற்றை துண்டுகளாக வெட்டி அருந்தும் நீரில் இட்டு அருந்தினால் மிகவும் நன்று என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான அதிக வெப்ப காலநிலை நிலவும் போது நீர் அதிகமாக அருந்தாவிட்டால் தலைவலி, தலைச்சுற்று, உடல் வேதனை, உடலில் நீர் குறைபாடு போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, இதனைக் கவனத்திற்கொண்டு நீரும் கூடுதலான இளநீர், தோடம்பழச்சாறு போன்ற பானங்கள் குடிப்பது சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, சிறு பிள்ளைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை லீற்றர் நீர் குடிக்க கொடுக்க வேண்டும் என்றும் வெப்பம் அதிகமாகவுள்ள இந்த நாட்களில் அடிக்கடி குளிப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வெளியே பயணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் இயலும் வரை குடை அல்லது தொப்பி அணிந்து செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், வெள்ளை நிற உடையணிந்து செல்ல வேண்டும் என்றும் இந்த உயர் வெப்ப நிலை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
More Tamil News
- வனவிலங்கு இறைச்சிகளை வேட்டையாடி உண்ட மஹிந்த அரசாங்கம்; அதிர்ச்சித் தகவல்
- கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவது தமிழ் மக்களின் உரிமை
- ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போன பதக்கம் கண்டுபிடிப்பு
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Drink 2 liters water everyday