இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.(Devotional Worship Today Horoscope )
வெற்றிலையின் நுனுயில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.
சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு நல்லதல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்பாதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
News Source By :tamil.webdunia.com.
மேலும் பல சோதிட தகவல்கள்
- சனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா ??
- விளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018
- சிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!
- மாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….!
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com