CPI report shooting incident Thoothukudi district Court ordered
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், சட்டத்தரணி சூர்யபிரகாசம் சென்னை மேல்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தூத்துக்குடி சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட தமிழக அரசுக்கு மனு அளித்தேன். அதை தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை. எனவே, சி.பி.ஐ. விசாரணை நடத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறித்த வழக்கை நீதிபதிகளான ரவீந்திரன மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய குழு இன்று வழக்கை விசாரித்தபோது, சட்டத்தரணி சூர்யபிரகாசம் வாதிட்டு, பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்டை முதல்வரே நியாயப்படுத்தி நேற்று பேட்டியளித்துள்ளார்.
எனவே, தமிழக அரசு விசாரித்தால் உண்மை வெளியே வராது. சி.பி.ஐ விசாரணை தேவை” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மேல்நீதிமன்றம் இந்த பிரச்சினை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.
CPI report shooting incident Thoothukudi district Court ordered
More Tamil News
- பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
- குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!
- திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
Tamil News Group websites :