Columbian Husband Caught
கொலம்பியாவில் காதலியுடன் சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டிருந்த கணவனை விமான நிலையத்தில் வைத்து கையும், களவுமாக பிடித்த மனைவி, காதலியின் குடுமியைப் பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலாம்பியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது காதலியுடன் ஜோஸ் மரிய கர்டோவா சர்வதேச விமான நிலையத்தில், கார்டஜினா என்ற இடத்திற்கு சுற்றுலா செல்வதற்காக சென்றுள்ளனர்.
அப்போது திடீரென அங்கு வந்த பெண் ஒருவர், அந்த ஜோடியுடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அந்த தொழிலதிபருடன் வந்திருந்த பெண்ணை இழுத்து , அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து சண்டை போட்டுள்ளார்.
அப்போது அந்த தொழிலதிபர் இருவரது சண்டையை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் ஆத்திரம் அடங்காத அந்தப் பெண் அவரையும் இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினார்.
நேற்றைக்கு நான் , இன்று இவளா என்று கடும் ஆத்திரத்துடன் சண்டை போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது சண்டை போட்ட அந்த பெண்தான் , தொழிலதிபரின் மனைவி என்பது தெரியவந்தது. அவருக்குத் தெரியாமல் அந்த கணவர் தனது காதலியுடன் டூர் போக இருந்தது அம்பலத்துக்கு வந்தது. அந்த மனைவியை , போலீசார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயற்சித்தும், உன்னை சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்த வேறொரு பயணி சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டார்