சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மீண்டும் பெண்

0
522
ChiefJustice Chennai HighCourt VijayaKamalesh acting

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில் ரமணி செயல்படவுள்ளார். ChiefJustice Chennai HighCourt VijayaKamalesh acting

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த இந்திரா பானார்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெற்று செல்கிறார்.

இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றிக் கொண்டிருந்த விஜயா கமலேஷ் தஹில் ரமணி, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்படவுள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தஹில் ரமணியை நியமிப்பதற்கான பரிந்துரையை குடியரசுத்தலைவர் வழங்கியிருக்கிறார்.

1982-ஆம் ஆண்டு முதல் மும்பை, கோவாவில் உள்ள பல்வேறு கீழ் நீதிமன்றங்களில் தஹில்ரமணி வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

இந்த நியமனம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் 2-வது பெண் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ChiefJustice Chennai HighCourt VijayaKamalesh acting