Chennai Press Association Rajini apologize journalist unanimous manner
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கோபத்தில் செய்தியாளரை ஒருமையில் திட்டியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களை, நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் நேரில் சந்தித்துள்ளார். அப்போது துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ரஜினிகாந்தை பார்த்து யார் என்று கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினியிடம், செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். சமூகவிரோதிகள்தான் போராட்டத்திற்கு காரணம் என்று நீங்கள் கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதை பற்றி உங்கள் கருத்து என்று ரஜினியிடம் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ரஜினி ஒருமையில் செய்தியாளரை பேசிவிட்டு வேறு ஏதும் கேள்விகள் இருக்கின்றதா? என்று கேட்டுவிட்டார். அதன்பிறகு ‘போராட்டம் போராட்டம் என்று சென்று கொண்டிருந்திருந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்றும் கூறினார்.
இந்நிலையில், சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி என்றும் இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Chennai Press Association Rajini apologize journalist unanimous manner
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :