Calgary flight diverted
ஹலிஃபெக்சில் இருந்து கல்கேரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று ரொரன்ரோ நோக்கி திசை திருப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த அந்த விமானம் ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில், 20 வயதான அந்த இளைஞர் கைது செய்யப்ப்டடதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
231 என்ற இலக்கமுடைய அந்த விமானத்தில் சர்ச்சைக்குரிய பயணி ஒருவர் இருப்பதாக தமக்கு இரவு 7 மணியளவில் முறைப்பாடு கிடைத்ததாகவும், 90 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கிய அந்த விமானம்யில் இருந்து, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி குறித்த அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் விபரம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக ஏறக்குறைய ஒன்றரை மணி நேரங்கள் ரொரன்ரோ விமான நிலையத்தில் தரித்து நின்ற அந்த பயணிகள் விமானம், பின்னர் அதிலிருந்த 150 பயணிகளுடன் கல்கரி நோக்கி புறப்பட்டுச் சென்றதாக வெஸட்ஜெட் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாலும், இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விபரங்களை வெளியிட முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.