benefit unauthorized authority administer dams constructed river
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமற்ற ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்காது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தயாரித்த வரைவுச் செயல்திட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அத்திட்டத்தை நடப்பு பருவத்திலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை நிர்வகிக்கும் அதிகாரமற்ற ஆணையம் அமைக்கப்பட்டி ருப்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 16 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் மத்திய அரசும் உயர் நீதிமன்றமும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டின.
ஆனால், இந்த ஆட்டத்தில் தமிழக மக்களின் கண்கள் தான் கட்டப்பட்டு, தமிழகத்திற்கு எதிரான சதித் திட்டத்தை அவர்கள் தெரிந்து கொள்ள முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தமிழக மக்களின் நிலை இதுவென்றால் தமிழக ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக செயல்பட்டனர்.
மத்திய அரசு எந்த திட்டத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாலும், “அது அற்புதமான திட்டம்; அதனால் காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டு விட்டது” என்று மத்திய அரசின் புகழ் பாடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இப்போது மத்திய அரசு அமைக்கவுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு எந்த வகையிலும் பயன் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், இதை தமிழக அரசு வரவேற்றுப் பாராட்டியிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களிடமிருந்து இதை மட்டும் தான் எதிர்பார்க்க முடியும்.
அதனால் தான் அந்த வாரியம் பியாஸ் ஆற்றின் நீரை பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் பகிர்ந்து அளித்து வருகிறது.
அதேபோன்ற அதிகாரங்களுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் தான் தமிழகத்திற்கு நீதி கிடைக்கும்.
ஆனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை பல்வேறு கட்ட ஆய்வுக்கு உட்படுத்திய மத்திய அரசும் உயர்நீதிமன்றமும் இணைந்து அத்தகைய அதிகாரம் இல்லாத ஆணையத்தை அமைத்துள்ளன.
இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. மத்திய அரசும் கர்நாடக பா.ஜ.க.வும் இணைந்து கர்நாடகத்துக்கு சாதகமான அமைப்பை உருவாக்கி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்துள்ளன. இதை உயர்நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு உயர்நீதிமன்றம், தமிழக அரசு ஆகிய மூன்று ஜனநாயக அமைப்புகளும் ஒரே குரலில் தெரிவித்துள்ளன.
கர்நாடகத்திலுள்ள அணைகளில் இருந்து எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டும்? எப்போது திறக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமும் அவை செயல்படுத்துகிறதா? என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்பது உண்மை தான்.
ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடும் அதிகாரம் அந்த ஆணையத்துக்கு இல்லாத நிலையில், மற்ற அதிகாரங்களை மட்டும் வழங்கியிருப்பதால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டால் அதை கர்நாடகம் மதித்து தானே ஆக வேண்டும்? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.
காவிரி மேலாண்மை ஆனையம் அல்ல. அதை விட அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆணையிட்டால் கூட கர்நாடகம் மதிக்காது என்பது தான் உண்மை. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்பின் உத்தரவுகளை கர்நாடகம் மதிக்கவில்லை.
எனவே, பாமக சார்பில் மீண்டும், மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தத் தீர்வாக அமையும். எனவே, அதை நோக்கிய சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
benefit unauthorized authority administer dams constructed river
More Tamil News
- கோவையில் அமமுகவினர் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு!
- கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது : நடிகர் பிரகாஷ் ராஜ்!
- நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி!
- சென்னையில் மழையா? மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மக்கள்!
- பணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது!
- போதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!
- காவிரி நீர்ப் பங்கீடு வழக்கு : நாளை மாலை தீர்ப்பு!
- எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டது பற்றி ராகுல்காந்தி விமர்சனம்!
- குதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…?
Tamil News Group websites :