இந்திய தொடருக்காக அழைக்கப்பட்டுள்ள முன்னணி வீரர்!!!

0
550
Ben Stokes recalled England ODI squad vs India

இந்திய அணிக்கெதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணிக்குழாமில் உபாதைக்குள்ளாகியிருந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, பென் ஸ்டோக்ஸ் தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்தார்.

இதன்காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான டி20 தொடர் மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி இருக்கவில்லை.

உபாதையிலிருந்து தற்போது குணமாகியுள்ள பென் ஸ்டோக்ஸ் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் வைட்டாலிட்டி டி20 பிளாஸ்டில் டுர்ஹாம் அணிக்காக விளையாடவுள்ளார். இதில் எதிர்வரும் 5ம் திகதி யோர்க்சையர் அணிக்கெதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுகிறார்.

இந்த போட்டியின் போது, ஸ்டோக்ஸின் உடற்தகுதி குறித்து ஆராயப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 

  • இங்கிலாந்து அணிக்குழாம்

இயன் மோர்கன் (தலைவர்), மொஹின் அலி, ஜொனி பெயார்ஸ்டோவ், ஜெக் போல், ஜோஸ் பட்லர், டொம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கட், அடில் ரஷீட், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட்

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Ben Stokes recalled England ODI squad vs India, Ben Stokes recalled England ODI squad vs India,Ben Stokes recalled England ODI squad vs India