Home Uncategorized யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை

யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை

0
462
beggars cant ask money today railway station wijaya samarasinghe

புகையிரதங்களில் மற்றும் புகையிரத நிலையங்களில் யாசகம் பெறுபவர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. beggars cant ask money today railway station wijaya samarasinghe

இவர்களுக்கு இன்று முதல் யாசகம் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

யாசகர்களால் மேற்கொள்ளப்படும் இடையூறுகள் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளை ஆராயந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாசகர்களின் செயற்பாடுகளினால் பயணிகள் அதிக இடையுறுகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதன் பொருட்டு இன்றிலிருந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

தேவை ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினரின் உதவியை நாடி, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் புகையிரத நிலையத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.
beggars cant ask money today railway station wijaya samarasinghe

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites