விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் “கொலைகாரன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகி உள்ளார்.(Arjun join Vijay Antonys next movie Kolaikaran)
அதாவது, விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ”காளி” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ”திமிரு பிடிச்சவன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்
இப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ”கொலைகாரன்” என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆண்ட்ரூ இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க இருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”இரும்புத்திரை” படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி ”மூடர்கூடம்” நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், ”திருடன்” என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* மெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!
* ஜோதிகாவின் காற்றின் மொழி : படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சூர்யா, சிவகுமார்..!
* கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அனுமதி கோரி தனுஷ் மனுத்தாக்கல்..!
* விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!
* இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!
* இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)
* விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!
* நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!
* இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!
Tags :-Arjun join Vijay Antonys next movie Kolaikaran
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-