அர்ஜூன் அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக எதுவும் பேச வேண்டாம். பேசாமல் இருந்தால் 5 கோடி ரூபா தருவதாக தொலைபேசியில் தனக்கு தெரிவித்ததாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சபையில் தெரிவித்தார். Arjun Aloysius Try Give 5 Crore Bribe Batticaloa Mp Yogeswaran
பாராளுமன்றத்தில் நேற்று இலஞ்சம் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
மட்டக்களப்பில் மாத்திரம் 20 முதல் 67 வரையான சட்டவிரோத மதுபான சாலைகள் உள்ளன. இது தொடர்பான நான் தடுக்க சென்றால் எனக்கு இலஞ்சம் தருவாக கூறுகின்றனர்.
பொலிஸாருக்கு இது தொடர்பான அறிவித்தால் அது அவர்கள் கண்டுக்கொள்வதில்லை. அவர்களும் இலஞ்சம் பெறுகின்றனர்.
அத்துடன் மட்டகளப்பில் உள்ள அர்ஜூன அலோசியஸின் எத்தனோல் நிறுவனத்திற்கு எதிராக நான் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தேன். இது தொடர்பாக எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இனிமேல் எத்தனோல் நிறுவனம் தொடர்பாகவோ அல்லது அர்ஜூன அலோசியஸுக்கு எதிராகவோ எதுவும் பேச வேண்டாம். 5 கோடி ரூபா தருவதாக தொலைபேசியில் அழைத்தவர்கள் கூறினர்.
இலஞ்சத்தின் மூலம் அர்ஜூன அலோசியஸ் எம்மை விலைக்கு வாங்க முயலுகின்றார் என யோகேஸ்வரன் சபையில் குற்றம் சுமத்தினார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு