ஆப்கானிஸ்தானுடன் மோதும் பங்களாதேஷ்! : அணி விபரம் வெளியானது…

0
569
afghanistan vs bangladesh 2018 dehradun news Tamil

(afghanistan vs bangladesh 2018 dehradun news Tamil)

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிராக அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாமில் இலங்கையுடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய மொஷ்டாக் ஹீசைன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையுடன் பெப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் மொஷ்டாக் ஹுசைனுக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனினும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுதந்திரக்கிண்ண முக்கோண இருபதுக்கு-20 தொடரில் மாற்று வீரர்கள் சிறப்பாக ஆடாத காரணத்தினால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுதந்திரக் கிண்ணத்தில் விளையாடிய மூன்று வீரர்கள், ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இம்ருல் கையிஸ், நூருல் ஹுசைன் மற்றும் டஸ்கின் அஹமட் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடர் ஜுன் 3,5 மற்றும் 7ம் திகதிகளில் டேராடூனில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரானது இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் முதலாவது இருபதுக்கு-20 தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் :

சகிப் அல் ஹசன் (தலைவர்), மொஹமதுல்லா, தமிம் இக்பால், சௌமிய சர்கார், லிடன் தாஸ், முஷ்தபிகூர் ரஹீம், சபீர் ரஹ்மான், மொஷ்டாக் ஹீசைன், அரிபுல் ஹக், மெஹிதி ஹாசன் மிராஷ், நஜ்முல் இஸ்லாம், முஷ்தபிசூர் ரஹ்மான், அபு ஹய்டர், ரூபல் ஹுசைன், அபு ஜெயட்

<<Tamil News Group websites>>