ஆசியாவை ஆளப்போகும் ஆப்கான்: வங்காளதேசத்தையும் பந்தாடியது..!

0
536
afghanistan beat 136 runs bangladesh asia cup 2018

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. afghanistan beat 136 runs bangladesh asia cup 2018,tamil sports,asia cup results,live cricket updates,tamil news

நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசனின் துல்லியமான பந்து வீசும் திறமையால் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து பெவிலியன் திரும்பினர்.

ஏழு விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், இணை சேர்ந்த குல்பதின் நயீப் மற்றும் ரஷி காண் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் இறுதி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 255 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

256 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியிலிருந்து லிடோன் தாஸ் மற்றும் நிஷ்மல் ஹேசெய்ன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினார். ஆப்கானிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சு, வங்காளதேசத்துக்கு பின்னடவை அளித்தது.

வங்காளதேசத்தின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்க, அதற்கு அடுத்த வந்த இரண்டாம் நிலை வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.

50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்காளதேசம் 119 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 136 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் 32 பந்துகளில் 57 ஓட்டங்களை குவித்தார். அதேபோல வங்காளதேசதுக்கு எதிரான பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் அர் ரகுமான், குல்பதின் நயீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

வங்காளதேச சார்பாக களமிறங்கிய சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிரடியாக விளையாடி 57 ஓட்டங்கள் குவித்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

afghanistan beat 136 runs bangladesh asia cup 2018

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news