அபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அகற்றப்படுகின்றன
அபுதாபியில் நேற்று கருணை அடிப்படையிலான மணிக்கு கூடுதல் 20 கி.மீ என்ற அனுமதி தடை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேக அளவை மட்டுமே சீராக கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகள் உத்தரவிடப்பட்டிருந்தனர்.
இதனடிப்படையில், அபுதாபி எமிரேட்டின் சாலை ஓரங்களில் நடப்பட்டிருந்த வேகக்கட்டுப்பாடு சம்பந்தமான அனைத்து அறிவிப்பு பலகைகளும் 3 வார காலங்களுக்குள் மாற்றப்படவுள்ளன.
எனினும், அபுதாபி எமிரேட்டின் பிரதான 2 நெடுஞ்சாலைகளான அல் அய்ன் மற்றும் சவுதி ரோடு ஆகியவையில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அதேவேகத்தில் செல்ல தொடர்ந்து அனுமதிக்கப்படும், அதாவது அபுதாபி to அல் அய்ன் மற்றும் ஷேக் கலீபா பின் ஜாயித் ரோடு எனப்படும் அபுதாபி to சவுதி சர்வதேச நெடுஞ்சாலை ஆகிய 2 நெடுஞ்சாலைகளில் மட்டும் உச்சபட்ச வேகமான மணிக்கு 160 கி.மீ என்ற வேகத்தில் செல்லலாம்.