
About 80 passengers lucky survivors boat which river Godavari
இந்திய ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கோதாவரி ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதையடுத்து, இதில் பயணம் செய்த120 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக ஆந்திர மாநிலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பாபிகொண்டலு மலைப்பகுதியின் அழகை கண்டுகளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இன்று படகில் சென்றுகொண்டிருந்தனர்.
வீரவரப்பு ரங்கா கிராமத்தின் அருகே கோதாவரி ஆற்றின் நடுப்பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, திடீரென படகின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் தீ பரவியதால் கடும் புகை எழுந்துள்ளது. பயணிகள் பீதியடைந்து படகின் ஒரு பகுதிக்கு ஓடியுள்ளனர். இதனால் படகு நிலை குலைந்தது. எனினும் படகோட்டி சாமர்த்தியமாக செயல்பட்டு கரைக்கு படகை திருப்பியுள்ளனர்.
கரையை நெருங்கியபோது ஏராளமான பயணிகள் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர். ஒருசிலரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். இதனால் படகில் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
About 80 passengers lucky survivors boat which river Godavari
more Time Tamil News Today
- காதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்!
- தமிழ்ப் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட கலாபக்காதலன் ; ஆர்யாவுக்கு ஸ்பெஷல் விருது
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- ஈரானிய ஜனாதிபதிக்கான சுவிஸ் அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news