கனடாவிற்கு வரும் பயணிகளை மூன்று நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்! பிரதமர் அறிவிப்பு

0
465

கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்க

ள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பர்.

அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனையை தங்கள் சொந்த

செலவில் செய்ய வேண்டும். சோதனையின் போது எதிர்மறையாக வந்தால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அடுத்த 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

அப்படி நேர்மறையான முடிவு வந்தால், அவர்கள் அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவர்’ என கூறினார்.

அதேபோல், மெக்ஸிகோ, கரீபியன் நாடுகளுடனான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் கனடா அறிவித்துள்ளது.