திரில் வெற்றியுடன் வாய்ப்பை தக்கவைத்தது மும்பை இந்தியன்ஸ்!

0
629
Mumbai Indians beat kings IX Punjab 2018

(Mumbai Indians beat kings IX Punjab 2018)

ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தூரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி கிரிஸ் கெயிலின் அதிரடி அரைசதம் மற்றும் ஸ்டோனிஸின் அதிரடியுடன் 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கிரிஸ் கெயில் 40 பந்துகளுக்கு 50 ஓட்டங்களையும், ஸ்டோனிஸ் 15 பந்துகளுக்கு 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பும்ரா 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 10 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை இழந்து 67 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 23 ஓட்டங்களையும், இசான் கிசான் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் அதிரடியாக ஆடி ஓட்டங்களை குவித்தனர். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, குர்னால் பாண்டியா 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திலிருந்த மும்பை அணி மூன்று இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளது.

புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை ஹைதராபாத் அணி பிடித்துள்ளதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் பிடித்துள்ளனர்.

<<Tamil News Group websites>>