ஒயில்டு கார்டு என்ட்ரியாக தன்னை பிக் பாஸ் 2 வீட்டிற்குள் அனுப்பி வைக்குமாறு நடிகை உமா ரியாஸ் கமலை கேட்டுக் கொண்டுள்ளார்.(Tamil Big Boss Shariq and Uma Riyaz Khan tamil news)
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து ஷாரிக் நேற்று வெளியேற்றப்பட்டார். மகனை அழைத்துச் செல்ல நடிகை உமா ரியாஸ் வந்திருந்தார். மேலும் ஷாரிக்கின் நண்பர்கள் 3 பேரும் வந்திருந்தனர்.
கமல் ஹாஸன் உமாவை மேடைக்கு அழைத்து பேசினார்.
யாரையும் சார்ந்து இருக்காமல் வாழ கற்றுக்கொள்ளட்டும் என்று நினைத்து தான் ஷாரிக்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தேன். நடிகை உமா ரியாஸ் என்பது போய் நான் வெளியே சென்றால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக்கின் அம்மா தானே என்று கூறி பலர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெருமையாக இருந்தது என்றார் உமா.
என் மகன் நிறைய கற்றுக் கொண்டுள்ளான் என்று உமா கூற ஷாரிக்கோ சமையல் நல்லா கத்துக்கிட்டேன், முன்பெல்லாம் சமைக்க தெரியாது, தற்போது சிக்கன் கிரேவி, ஃபிரைட் ரைஸ் செய்யத் தெரியும் என்றார். ஷாரிக் கூறியதை கேட்ட உமாவோ, தயவு செய்து சமைத்துக் கொடு தம்பி என்றார்.
ஒரு சின்ன வேண்டுகோள் சார். ஒயில்டு கார்டு என்ட்ரியா என்னை உள்ளே அனுப்புகிறீர்களா என்று உமா கமலிடம் கேட்க அவரோ வாய்விட்டு சிரித்தார். சத்தியமாக எனக்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக உள்ளே போகணும். வச்சு செஞ்சுவிடுவேன் என்று உமா கூறியதை கேட்டு கமல் தலையில் அடித்துக் கொண்டார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வரப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லத் துடிக்கிறார் உமா ரியாஸ். உமாவின் கோரிக்கையை ஏற்று அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
tags :- Tamil Big Boss Shariq and Uma Riyaz Khan tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
வீட்டுக்கு வந்த டிடியை இப்படியா கேவலபடுத்துறது : தர்ம சங்கடத்தில் டிடி
புத்த துறவியின் காம பசிக்கு இரையான இளம்பெண்கள் : சீனாவில் அதிர்ச்சி
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி
எமது ஏனைய தளங்கள்