“அவுஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது“ : பிசிசிஐ!

0
708
India refuse pink ball day-night Test Australia tour 2018

(India refuse pink ball day-night Test Australia tour 2018)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விடுக்கப்பட்ட பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு பந்தின் தரத்தில் சந்தேகங்கள் இருப்பதாக குறிப்பிட்டு, இந்த மறுப்பை இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இவ்வருடம் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த போட்டித் தொடரில் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் சபையிடம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் இந்த கோரிக்கையை நிராகரிப்பதாக இந்திய கிரிக்கெட் சபையின் நிர்வாகி வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர்,
“அவுஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு நாம் எவ்விதத்திலும் தயாரில்லை. அதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.

நாம் இப்போது இந்தியாவின் உள்ளூர் தொடரான துலிப் கிண்ணத்தில் இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தி, ஆய்வுசெய்து வருகின்றோம்.

இப்போதைக்கு உள்ளூர் போட்டிகளில் மாத்திரம் இளஞ்சிவப்பு பந்தில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

<<Tamil News Group websites>>