துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்தேவ் குமார் சர்மா ( வயத் 34 )தொழில் நுட்ப பணியாளராக வேலை செய்து வந்தார். அவர் கடந்த 09.07.2018 அன்று உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். Indian youth died Dubai handed relatives trusted body
அவர் வேலை செய்து வந்த நிறுவனம் அவரது உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க உதவிடுமாறு ஈமான் அமைப்பை கேட்டுக் கொண்டது.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் மற்றும் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் அவரது உடல் பீகார் மாநிலம் பாட்னாவில் அவர்து சகோதரர்களிடம் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் மூலம் ஒப்படைக்கப்பட்டது.
தனது சகோதரரின் உடலை கொண்டு வர உதவிய ஈமான் அமைப்பின் மனித நேய பணிகளுக்கு அந்த குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த பணியில் ஒத்துழைப்பு அளித்த இந்திய துணைத் தூதரகம், அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தினர் உள்ளிட்டோருக்கும் தங்களது நன்றியை கூறினர்.