சதோசவில் சீனி வாங்கியவர்களுக்கு எச்சரிக்கை – யூரியா கலந்துள்ளது

0
493
tamil news vavunia sathosa urea missed sale suger

(tamil news vavunia sathosa urea missed sale suger)

வவுனியா நகரில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் நேற்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமெனவும் உடனடியாக மீள கையளிக்குமாறும் வவுனியா பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வவுனியா சதோசா விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியாவினை கொள்வனவு செய்து சதோசா விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார்.

அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து விற்பனை செய்துள்ளார்.

இதனடிப்படையில், காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதோசா விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்கள் அவற்றை உபயோகிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(tamil news vavunia sathosa urea missed sale suger)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites