ஒன்ராறியோவின் Stoney Creek பகுதியில் உள்ள இந்திய தம்பதியினரின் குழந்தைகளை கொலை செய்யப்போவதாக, நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Racist attack Indian couple
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஒன்ராறியோவின் Stoney Creek பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த காரை 47 வயதான நபர் ஒருவர் வேகமாக எடுத்தபோது பெண் ஒருவர் மீது அது மோதியுள்ளது.
இதில், அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதை பெண்ணின் கணவன் தட்டி கேட்க, அதற்கு காரில் இருந்தவர் அவருடன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது “நான் கனடா குடிமகன், உன் குழந்தையை கொன்றுவிடுவேன்!” என கூறியதோடு தகாத வார்த்தைகளால் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட தம்பதியினர் இந்தியர்கள் எனவும், கனேடிய குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
tags :- Racist attack Indian couple
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- பிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்



