கனடாவின் மிக விலை உயர்ந்த வீடு ஏலம்!!

0
350
Canada’s most expensive house auction

கனடாவின் மிக விலை உயர்ந்த கியுபெக் பகுதியில் அமைந்துள்ள அதி சொகுசு வீடு, ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. (Canada’s most expensive house auction)

வீட்டின் சொந்தக்காரரான பிட்ஸ்பர்க் பெங்கின்ஸின் முன்னணி விளையாட்டு வீரரான மரியோ லெமிக்ஸ், இந்த வீட்டை 22 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு விற்பனைக்கு விட்டுள்ளார்.

மொன்றியலில் இருந்து 145 கிலோ மீற்றர்கள் வடமேற்கில் இந்த வீடு அமைந்துள்ளது. ஆடம்பர வீடு விற்பனை நிறுவனமான ஏஞ்சல் அன்ட் வோல்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் இவ்வீடு சந்தைக்கு வந்துள்ளது.

17,000 சதுர அடியுடன் 5.25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த வீட்டில், சுமார் 50 அறைகள் உள்ளன.

இந்த வீட்டில், 17 கணப்படுப்புக்கள், திரையரங்கு, நீச்சல் தடாகம், ஸ்பா, டென்னிஸ் மைதானம், உடற்பயிற்சி கூடம், எட்டு படுக்கை அறைகள், 8 குழியறைகள், ஒரு வைன் நிலவறை, நான்கு வாகன தரிப்பிடங்கள் உள்ளன.

பிட்ஸ்பர்க் பெங்கின்ஸின் முன்னணி விளையாட்டு வீரரான மரியோ லெமிக்ஸ், இரண்டு முறை ஸ்ரான்லி கிண்ணத்தை வென்று 17 சீசன்களில் 1723 புள்ளிகளை பெற்றவர் ஆவார். அத்தோடு என்.எச்.எல். சம்பியன்சிப்பையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Canada’s most expensive house auction

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்