கனடாவின் Toronto நகரில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளதாவது: Canada Toronto Gun shooting ISIS undertook
Toronto நகரில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஃபைசல் ஹுசைன், ஐ.எஸ். அமைப்பின் உறுப்பினர் ஆவார்.
சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ். படையினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் கூட்டணி நாடுகளிலுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தும்படி எங்களது உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில், ஃபைசல் ஹுசைன் கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார் என்று அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆனாலும், தாக்குதல் நடத்திய ஃபைசல் ஹுசைன் மன நோயாளி எனவும், அதற்காக அவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்தார் எனவும் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர் ஏற்கனவே மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, கனடாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், ஃபைசல் ஹுசைனின் பெயரை வெளியிட்டதாக Ontario மாகாண சிறப்புப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
Toronto நகரின் கிரீக்டெளன் பகுதியில், நடைபாதை வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த ஃபைசல் ஹுசைன், அந்தப் பகுதியில் இருந்தவர்களை நோக்கி தனது கைத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்.
டான்ஃபோர்த் சாலையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 வயது பெண்ணும், 10 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். 10 வயது முதல் 59 வயது வரையான 13 பேர் காயமடைந்தனர்.
பொலிஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஃபைசல் ஹுசைன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது பெற்றோர்கள் பாகிஸ்தானிலிருந்து கனடாவில் குடியேறியவர்கள் எனவும், Toronto நகரில் வசித்து வந்த ஃபைசல் ஹுசைன், பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒருவரையாவது கொல்ல வேண்டும் அதுவே என் இலட்சியம் என ஆசிரியரிடம் ஃபைசல் ஹுசைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- Canada Toronto Gun shooting ISIS undertook
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- TIFF திரைப்பட தரப்படுத்தல் பட்டியல்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- பிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர சம்பவம்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.