ஈழத்தமிழர்களின் தீர்வில் தமிழ்நாடு தலையிடமுடியாது! முதலமைச்சர் விக்கி காட்டம்!

0
531
North Chief Minister Vigneswaran Says Tamil Nadu Involvement

இலங்கை தமிழர்களின் தீர்வில் தமிழ்நாடு தலையிட முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். North Chief Minister Vigneswaran Says Tamil Nadu Involvement

மேலும் இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது என தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

தமிழ் நாட்டின் கட்சிகளுக்குள்ளேயே நிறைய மோதல்கள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் பிரச்சினையில் தமிழ்நாடு தலையிடுவது பொருத்தமற்றது.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையின் பிரச்சினை தொடர்பாக கவனம் கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்கள் குறையாது என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites