இலங்கை தமிழர்களின் தீர்வில் தமிழ்நாடு தலையிட முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். North Chief Minister Vigneswaran Says Tamil Nadu Involvement
மேலும் இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சினையில் தலையிடுவதற்கான தகுதியை தமிழ்நாடு இழந்துள்ளது என தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
தமிழ் நாட்டின் கட்சிகளுக்குள்ளேயே நிறைய மோதல்கள் காணப்படுகின்ற நிலையில் இலங்கையின் பிரச்சினையில் தமிழ்நாடு தலையிடுவது பொருத்தமற்றது.
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கையின் பிரச்சினை தொடர்பாக கவனம் கொண்டுள்ளமையால் இலங்கை அரசாங்கம் மீதான அழுத்தங்கள் குறையாது என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே முதலமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வருட இறுதிக்குள் சென்னை இ திருச்சியிலிருந்து பலாலிக்கு விமான சேவை!
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு