லாட்டரியில் விழுந்த $60 மில்லியன் பரிசை நண்பர்களுடன் பகிர்ந்த நபர்!!

0
479
$ 60 million prize sold lottery friends

கனடா லாட்டரியில் நபர் ஒருவருக்கு $60 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் தனது நான்கு நண்பர்களுடனும் பரிசு தொகையை பகிர்ந்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ($ 60 million prize sold lottery friends)

ஒட்டாவாவை சேர்ந்த பிரயென் ரெட்மேன், ஸ்டீபன், டியோன், கிறிஸ்டோபர், நார்மன் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஐந்து பேருமே வழமையாகவே லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் உள்ளவர்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஐந்து பேரும் சேர்ந்து ஆளுக்கொரு லாட்டரி சீட்டுகளை வாங்கிய போது, அதில் ரெட்மேன் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசாக $60 மில்லியன் விழுந்துள்ளது.

இந்த பரிசு தொகையை ரெட்மேன் தனியாக எடுத்து கொள்ள விரும்பாமல் தனது நான்கு நண்பர்களுடனும் பரிசு தொகையை பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், பரிசு விழுந்தது மகிழ்ச்சியளிப்பதோடு, என் நண்பர்களுடன் அதை பகிர்ந்தது, எனக்கு மேலும் உற்சாகத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

tags :-  $ 60 million prize sold lottery friends

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்